தெலுங்கானா : பத்தாம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சக மாணவர்கள்.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத் ஹயநத் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியின் வீட்டிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் வகுப்பில் படிக்கும் சில மாணவர்கள் சென்றுள்ளனர். 

அங்கு அந்த மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, அந்த மாணவியை சகமாணவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை ஒரு  மாணவன் வீடியோ எடுத்துள்ளான். 

அதன் பின்னர், மாணவர்கள் "இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவோம்" என்று மாணவியை மிரட்டியுள்ளனர். இதன் காரணமாக மாணவி இந்த சம்பவத்தை யாரிடமும் தெரியப்படுத்தவில்லை.

இந்த சம்பவம் நடைப்பெற்று பத்து நாட்கள் கழித்து பாலியல் வன்கொடுமை செய்த மாணவன் வெறொரு மாணவனை அழைத்துக்கொண்டு மீண்டும் மாணவியின் வீட்டிற்கு வந்து, அங்கு மாணவியை மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இந்நிலையில், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை மாணவர் சமூகவலைதளமான வாட்ஸ்-அப்பில் நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையறிந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஐந்து மாணவர்களை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near telungana school students arrested for sexuall harassment


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->