ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட கான்ஸ்டபிள் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழப்பு.!
near telungana police constable died in working out at gym
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தெகந்தராபாத் ஆசிப் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் விஷால். இவர் சிலகாலமாக மொரட்பள்ளியில் உள்ள ஜீம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் ஜீம்மிற்கு வந்த விஷால் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, அதே இடத்திலேயே சுருண்டு விழுந்தார்.

அருகிலிருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக விஷாலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதற்கிடையே ஜீம்மில் உடற்பயிற்சி செய்தபோது விஷால் சுருண்டு விழும் வீடியோ அங்குள்ள கண்காணிப்புக்கு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த சமூகவலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
English Summary
near telungana police constable died in working out at gym