கிங் பிஷர் பீர் கிடைக்கவில்லை என்று ஆட்சியரிடம் மனு அளித்த போதை ஆசாமி.! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலத்தில் மதுபான கடைகள் அனைத்தும் தனியார் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், மதுக்கடைகளை நடத்துபவர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பீர் மது பிரியர் ஒருவர் ஜெகத்யாலா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைத்தீர்வு கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:- 

"தெலுங்கானா மாநிலத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் கிங்பிஷர் பீர் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மதுபான கடைகளில் கிங் பிஷர் பீர் விற்பனை செய்யப்படுவது இல்லை. 

இதன் காரணமாக கிங் பிஷர் பீரை விரும்பி குடித்து வந்த மது பிரியர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர். ஆகவே, நகர்ப்புறங்களிலும் பீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை படித்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மதுக்கடைகளில் கிங்பிஷர் பீர் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனுதாரரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near telungana man complaint to district collecter for king fisher beer not sale in liquar shop


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->