மருத்துவமனையில் தாயுடன் தூங்கிய கை குழந்தை.! தெருநாய்கள் கவ்வி சென்ற சம்பவம்.!
near rajasthan street dogs killed child in hospital
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலி மாவட்டம் ஜவாய்பந்த் பகுதியை சேர்ந்தவர் மகேந்திர குமார். இவர் உடல்நல குறைவின் காரணமாக சிரோஹி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவரது மனைவி ரேகா மற்றும் அவருடைய மூன்று குழந்தைகளும் அந்த மருத்துவமனையின் வார்டிலேயே தங்கியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று இரவு அனைவரும் ஒன்றாக தூங்கியுள்ளனர். அப்போது, திடீரென வார்டுக்குள் நுழைந்த மூன்று தெரு நாய்கள் ஒருமாத ஆண் குழந்தையை இழுத்து சென்றுள்ளன.
இதனால் கதறி அழுத குழந்தையின் சத்தம் கேட்டு மற்ற வார்டில் இருந்தவர்கள் எழுந்து வந்து குழந்தையை நாய்கள் இழுத்து செல்வதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் குழந்தையை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனால், குழந்தையை நாய்கள் இழுத்து சென்றதி. அதில் பலத்த காயமடைந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near rajasthan street dogs killed child in hospital