மைசூர் : கல்லூரி கேண்டீன் உணவில் செத்து கிடந்த எலி.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூருவில் மானச கங்கோத்ரி பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அரசு கலைக்கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அவர்கள் நேற்று வழக்கம் போல் கல்லூரி விடுதியில் இருந்த உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். 

அப்போது ஒரு மாணவனின் சாப்பாட்டில் எலி கிடந்துள்ளது. இதை பார்த்து உடனே அந்த மாணவன் கூச்சலிட்டார். ஆனால், அதற்கால அனைத்து மாணவர்களும்  இந்த சாப்பாடை சாப்பிட்டுள்ளனர். இதனால், அந்த உணவை அவர்கள் ஜீரணிக்க முடியாமல் தவித்தனர். 

இதையடுத்து மாணவர்கள் அனைவரும் தரமான உணவு வழங்க வேண்டி, கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த கல்லூரி பதிவாளர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். 

அப்போது மாணவர்கள் தரப்பில் இருந்து கல்லூரியில் சுத்தமான குடிநீர் இல்லை, கழிவறை வசதி இல்லை, உணவில் கரப்பான் பூச்சி மற்றும் எலிகள் போன்றவை செத்து மிதக்கிறது. ஒரு தரமான உணவு கூட இல்லை. இதை சாப்பிட்டு பல மாணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

ஆகவே, கல்லூரியில் மாணவருக்கு தரமான உணவு வழங்கவேண்டும். தரமான உணவு வழங்கும் வரை எங்கள் போராட்டம் தொடங்கும் என்றுத் தெரிவித்தனர். இதைக்கேட்ட கல்லூரி பதிவாளர், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தார். அதன் பின்னர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து வகுப்பிற்கு சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near mysore college rat body on canteen food


கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - பாஜக கூட்டணி உடைந்தால் யாருக்கு பயன்?
Seithipunal