அடுத்தடுத்து உயிரிழந்த சகோதர, சகோதரி.! பூச்சிக் கொல்லி மருந்துதான் காரணமா?
near maharastra brother and sister died
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்தாரா மாவட்டம் முந்தே கிராமத்தைச் சேர்ந்தவர் சிறுவன் ஷ்லோக் அரவிந்த் மாலி. இவரது சகோதரி தனிஷ்கா அரவிந்த் மாலி. இவர்கள் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென சிறுவனுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

இதைப்பார்த்த சிறுவர்களின் பெற்றோர்கள் சிறுவனை கரத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி தனிஷ்காவுக்கும் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கும் வாந்தி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பிரேத பரிசோதனையில், சிறுவனுக்கு அதிக ரத்த போக்கு மற்றும் நீரிழப்பு போன்றவை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றுத் தெரிய வந்துள்ளது. இன்னும் சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவு வெளியாகவில்லை.

இது தொடர்பாக சிறுவர்களின் குடும்பத்தினர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் "வீட்டில் தானிய கிடங்கில் இருந்து பூச்சி கொல்லி பொடியை அவர்கள் எடுத்து சாப்பிட்டு இருக்க கூடும்" என்றுத் தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near maharastra brother and sister died