ம.பியில் பரபரப்பு - அமரர் ஊர்தி இல்லாததால் இறந்த குழந்தையை பேருந்தில் எடுத்துச் சென்ற தந்தை.!
near madhya pradesh father took the dead child in bus
ம.பியில் பரபரப்பு - அமரர் ஊர்தி இல்லாததால் இறந்த குழந்தையை பேருந்தில் எடுத்துச் சென்ற தந்தை.!
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தின்தோரி மாவட்டம் சகாஜ்புரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுனில் துர்வே-ஜாம்னி பாய் தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 13-ந் தேதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்தக் குழந்தை பலவீனமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லுமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி பெற்றோர், அந்த குழந்தையை எடுத்துச்சென்றனர்.

ஆனால் அந்தக் குழந்தை கடந்த 15-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டது. இதையடுத்து அந்தக் குழந்தையின் பெற்றோர் தங்கள் குழந்தையின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்திக் கேட்டுள்ளனர்.
அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி இல்லை என்று கூறி தர மறுத்துள்ளது. மேலும், சுனிலிடம் போதுமான பணவசதி இல்லாததால், தனியார் பிண ஊர்தியை அழைப்பதற்கும் முடியவில்லை. அதனால், சுனில் குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து, பேருந்தில் எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
near madhya pradesh father took the dead child in bus