பெங்களூர் : கட்டுமானத் தளத்தில் குழிக்குள் விழுந்து சிறுமி உயிரிழப்பு.!
near banglore six years old girl died in construction site
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூர் கே.ஆர்.நகரில் தம்பதியினர் ஒருவர் தனது ஆறுவயது பெண் குழந்தையுடன் தங்கி கட்டிட வேலை செய்து வருகின்றன. இந்த நிலையில், இந்த குழந்தை நேற்று இரவு லிப்ட் நிறுவுவதற்காகத் தோண்டப்பட்ட குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை அறியாத பெற்றோர் சிறுமியை அனைத்து இடங்களிலும் தேடி வந்தனர். இரவு முழுவதும் தேடியும் குழந்தை எங்கேயும் கிடைக்கவில்லை. இதையடுத்து இன்று காலை குழியில் தண்ணீர் நிரப்பப்பட்டபோது குழந்தையின் சடலம் மிதந்தது தெரியவந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளிகள் சம்பவம் தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ததில், அந்த கட்டடம் விக்ரம் என்பவருக்குச் சொந்தமானது என்பதும், கட்டுமானப் பணியில் எந்தவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, கட்டுமான பணிகள் நடக்கும் இடத்திற்குச் சென்று பாதுகாப்புக்கு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்..
English Summary
near banglore six years old girl died in construction site