டெல்லியில் இஸ்லாமிய இளைஞர் அடித்துக் கொலை.! - குற்றவாளிகளுக்கு குறி வைத்த போலீசார்.!
muslim youth murder in delhi
டெல்லியில் இஸ்லாமிய இளைஞர் அடித்துக் கொலை.! - குற்றவாளிகளுக்கு குறி வைத்த போலீசார்.!
நாட்டின் தலைநகரான டெல்லியில் நந்த் நாக்ரி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் வாஜித் மகன் இஸர். இவர் நேற்று மாலை உடலில் காயங்களுடன் வீட்டு வாசலில் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வாஜித், தனது மகனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், இஸர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக வாஜித் போலீஸில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், "நந்த் நாக்ரியில் உள்ள ஜி 4 பிளாக் பகுதியில் திருடன் என்று எனது மகனை சில இளைஞர்கள் கட்டி வைத்து அதிகாலை முதலே அடித்துள்ளனர். இதில் அடி தங்க முடியாமல் மயங்கி விழுந்த எனது மகனை பக்கத்து வீட்டுக்காரர் அமித் என்பவர் ரிக்சாவில் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அப்போது, தன்னை திருடன் என்று சந்தேகப்பட்டு சிலர் தூணில் கட்டி வைத்து அடித்ததாகவும், அவர்களை அடையாளம் தெரியும் என்று என் மகன் இஸர் தெரிவித்தார். ஆகவே, எனது மகனை அடித்துக் கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் திருடன் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
muslim youth murder in delhi