போதை தலைக்கேற., புத்தி மாறிய குரங்கு.! மோசமான காரியம் செய்ததால் விபரீதம்.!  - Seithipunal
Seithipunal


கான்பூரில் குரங்கு வளர்த்த ஒருவர் அதற்கு மது குடிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். தான் எப்போது மது அருந்தினாலும், தன்னுடைய குரங்குக்கும் ஒரு பங்கை கொடுத்து குடிக்க வைத்து வளர்த்து வந்துள்ளார். பின்னர் போதை தலைக்கேற இருவரும் ஒன்றாக படுத்து உறங்கி விடுவார்களாம். 

இதுபோல, அந்த குரங்கை போதைக்கு அடிமையாக வளர்த்து வந்த அவர், ஒரு கட்டத்தில் மது அருந்தி உயிரை விட்ட நிலையில், பின்னர் குரங்கிற்கு மது கொடுக்க ஆள் இல்லாமல் போனது. இதன்காரணமாக இந்த குரங்கு போதைக்கு அடிமையாகி புத்தி மாறி அது கிடைக்காத விரக்தியில் 250 பேரை கடித்து குதறி உள்ளது. 

இதனை பிடித்து வனப்பகுதியில் விட்டாலும் மற்ற மிருகங்களை தாக்கலாம் என நினைத்த வனத்துறையினர் அதனை கூண்டில் வைத்து அடைத்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அந்த குரங்கு சிறைக்கைதியாக இருந்துள்ளது. அதன் பின்னர் பரிசோதித்தபோது அது கொஞ்சம் கூட மாறவே இல்லை. போதைக்கு அடிமையான குரங்கு தனது சுதந்திரத்தை பறிகொடுத்துவிட்டு ஆயுள் கைதியாக தற்பொழுது மாறி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

monkey addicted to liquor drinks


கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
கருத்துக் கணிப்பு

ஜனவரி மாதத்தில் பள்ளி, கல்லூரிகள்.,
Seithipunal