கேரளா சட்டமன்றத்தில் அமைச்சர் பி.டி.ஆர்! கொண்டுவரப்பட்ட அதிரடி தீர்மானம்!  - Seithipunal
Seithipunal


திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு மதத்தினர், வெவ்வேறு மதச் சட்டங்களைப் பின்பற்றி வருகின்றனர்.

இத்னை மாற்றி, நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்ட வர மத்திய அரசு கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த பொதுசிவில் சட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், பழங்குடியின மக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரள மாநில அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தது.

மேலும், பொது சிவில் சட்ட முன்வடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இதற்கிடையே, கேரள சட்டமன்ற கூட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டு வருகிறார்.

சட்டமன்ற கூட்டத்தின் நடைமுறையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அதிகாரிகள் இன்று பார்வையிட்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister PTR visit Kerala Assembly 2023


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->