சிபிஐ அதிகாரி போல் பேசி 59 லட்சத்தை அலேக்கா தூக்கிய நபர்கள் - போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலம் தானே நகரை சேர்ந்த நபருக்கு நவம்பர் 26-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய அந்த நபர் தன்னை டெல்லியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரி என்று கூறி 'டெல்லியில் உங்கள் பெயரில் ஒரு பார்சல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

'இது குறித்த விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது, அவர்கள் உங்களிடம் பேசுவார்கள், விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்' என்று கூறியிருக்கிறார். அந்த நபர் கூறியது படி சிறிது நேரத்தில், வேறு ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. 

அதில் பேசிய நபர் தன்னை சி.பி.ஐ. அதிகாரி என்று தெரிவித்து, 'கடத்தல் மற்றும் பணமோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் உங்களுக்கு தொடர்புள்ளதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 59 லட்சம் ரூபாய் கொடுத்தால் உங்கள் பெயரை வழக்கில் இருந்து நீக்கிவிடுவோம். இல்லை என்றால் உங்கள் மீது நடவடிககை எடுப்போம்' என்று மிரட்டியுள்ளார். 

இதனால் பயந்துபோன அவர், எதிர்முனையில் பேசிய நபர் கொடுத்த பல வங்கிக்கணக்குகளுக்கு பணத்தை அனுப்பி உள்ளார். இருப்பினும், பணத்தை அனுப்பிய பின்னர் அந்த நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அந்த நபர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

man loss 59 lakhs in online fraud at maharastra


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->