மேட்ரிமோனியால் வந்த வினை - 50 சவரன் நகையுடன் ஓடிய கணவர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!  - Seithipunal
Seithipunal


மேட்ரிமோனியால் வந்த வினை - 50 சவரன் நகையுடன் ஓடிய கணவர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! 

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியை சேர்ந்தவர்ரம்யா தம்பதியினர். கணவனை இழந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் ரம்யா மகளின் பாதுகாப்பு கருதி இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்து, மேட்ரிமோனி மூலம் தகவல் பதிவிட்டுள்ளார். 

இந்தத் தகவலை பார்த்து வினோத்குமார் என்பவர் ரம்யாவிற்கு அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர் ரம்யாவிடம், தான், வேலூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றுவதாகவும், ஒரு விதவையை திருமணம் செய்து வாழ்வு கொடுக்க விரும்புவதாகவும், இதன் மூலம் சமூக சீர்த்திருத்தத்திற்கு முன்னுதாரணமாக இருக்க போவதாகவும் ஆசை வார்த்தைகள் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இருவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், வினோத்குமார் சீதனமாக 50 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார். அதன் பின்னர் அவர் வேலூர் அருகே உள்ள அரியூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ரம்யாவை தங்க வைத்துள்ளார்.

இதை தொடர்ந்து வினோத்குமார் தங்கள் மகளை நன்றாக படிக்க வைக்கவும், சொந்தமாக மனை வாங்கி வீடு கட்டுவதாகவும் கூறி, ரம்யாவிடம் இருந்து ரூ.14 லட்சத்தினை வாங்கி, அவற்றை குடித்தே அழித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார் ரம்யாவை தாக்கி வீட்டினுள் அடைத்து வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவசர போலீஸ் 100 மூலம் புகார் அளித்த ரம்யா காவல் நிலையதிற்கு சென்ற போது அங்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, வினோத்குமார் ஏற்கெனவே 2 திருமணம் செய்திருப்பதும், அதில் முதல் மனைவிக்கு ஒரு மகன் இருப்பதும் , இரண்டாவது மனைவி இறந்து போனதும் தெரியவந்தது. 

மேலும், ரம்யாவிடம் வாங்கிய பணத்தில் முதல் மனைவி மகனுக்கு பைக் வாங்கி கொடுத்ததுடன், பல பெண்களுடனும் தொடர்பில் இருந்துள்ளதும் தெரியவந்தது. உடனே ரம்யா தன்னை ஏமாற்றி திருமணம் செய்து சீதனமாக பெற்ற 50 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.14 லட்சத்தை மீட்டுத்தருமாறு புகாரளித்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for cheat money and gold in andira


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->