பள்ளிகளில் இனி இது கூடாது.- அதிரடி உத்தரவை போட்ட பள்ளிகல்வித்துறை..!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் மும்பையில் இருக்கும் தயானந்த் என்ற தனியார் பள்ளியில் அந்த சட்டம் குறித்து மாணவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

இது குறித்து மராட்டிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்தார். இது குறித்து மாநில அரசும் விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றது.

இந்நிலையில் தற்பொழுது பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை சார்பில் வந்துள்ளது.

அதில், "அரசியல் நிகழ்ச்சிகளை பள்ளியில் அனுமதிக்கக் கூடாது. மாணவர்கள் அரசியல் நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது.

இதுகுறித்து பாஜகவின் முன்னாள் பள்ளி கல்வி துறை அமைச்சர் ஆஷிஸ் செலார் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharastra govt of ministry education announce to not allow school


கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
கருத்துக் கணிப்பு

கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு காரணமாக இருப்பது..
Seithipunal