கோழிக்கறி குழப்புக்காக மனைவியை அடித்தே கொன்ற கணவன்.!  - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவி கோழிக்கறி குழம்பு சமைத்து தராத காரணத்தினால், அவரை அடித்தே கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், ஷாதுல் மாவட்டத்துக்கு உட்பட்ட சிமரியாத்லா கிராமத்தை சேர்ந்தவர் கமலேஷ் கோல். இவருக்கு வயது 40 ஆகிறது. இவரின் மனைவி ரம்பை கோல் (வயது 32). கடந்த 23ஆம் தேதி காமலேஷின் மனைவி ரம்பை கோல் மர்மமான முறையில் அவரின் வீட்டில் உயிரிழந்து கிடந்தார்.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் ரம்பை கோலை அவரது கணவரை அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கையில்,

"கடந்த 23ஆம் தேதி அன்று இரவு கமலேஷ் தனது மனைவியிடம் கோழிக்கறி குழம்பு சமைத்து தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது அவரின் மனைவி முடியாது என்று கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த கமலேஷ், மனைவியின் தலையில் பலமாக உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே ரம்பை சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து அவரை கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று போலீசார் தெரிவித்துள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh WIFE KILLED HER HUSBAND


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal