எதிர்ப்புகளையும் தாண்டி, முஸ்லீம் மதத்தவரின் நெகிழ்ச்சி செயல்..!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூர் பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆஜிஸ் கான் என்பவருக்கு கடவுள் கிருஷ்ணர் பிறந்த தினமான ஜென்மாஷ்டமி தினத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகன் கிருஷ்ணர் பிறந்த தினத்தில் பிறந்த காரணத்தால் சிறிதும் யோசிக்காமல் அவனுக்கு கிருஷ்ணா என பெயர் சூட்டினார். 

இதற்கு முதலில் அவருடைய குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால், பின்னர் கிருஷ்ணா பெயரை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இது நடந்து 12 வருடங்கள் ஆகி விட்டது ஆஜிஸ் கான் தன்னுடைய மகனின் பெயரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்றவில்லை. 

இது குறித்து ஆஜிஸ் கான், " கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் 2008 ஆகஸ்ட் 23 ஆம் தேதியில் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது அன்று  விண்ணப்பத்தை நிரப்புவதற்காக டாக்டர் என்னிடம் குழந்தையின் பெயர் என்னவென்று கேட்ட போது அன்று ஜென்மாஷ்டமி என்பதால் உடனே  நான் கிருஷ்ணா என்று தெரிவித்தேன். 

இதற்கு மருத்துவர்களும், குடும்பத்தினரும் கிருஷ்ணா என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், குழந்தைக்கு பெயர் வைக்க தந்தையாக எனக்கு உரிமை உண்டு நான் அவர்களிடம் கூறினேன். அனைவரும் எதிர்த்து விட்டு சமாதானமாகி ஏற்றுக்கொண்டனர்" என தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh man name for his son


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->