பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் - 15-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.! - Seithipunal
Seithipunal


மத்தியபிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நேற்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'முக்கியமந்திரி லட்லி பெஹனா யோஜனா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

"இந்தத் திட்டத்தின் படி, வருமானவரி செலுத்தாதவர்கள் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் பெரும் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். 

இந்தத் திட்டத்திற்கு இந்த மாதம் 15-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, மே மாதம் 31-ந் தேதி பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும்.

அதன் பின்னர் ஜூன் மாதம் 10-ந் தேதியில் இருந்து பெண்களுக்கு மாதந்தோறும் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்படும். இந்தத் திட்டத்திற்காக  பட்ஜெட்டில் ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madhya pradesh CM Shivraj Singh Chouhan launch rs 1000 scheame per month to woman


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->