2006-ல் உயிரிழந்த நபர் 2009-ல் கடன் வாங்கியதாக நோட்டீஸ்..! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள, சிந்தவாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்தயால் வர்மா. விவசாயியான இவரது தந்தை அஜய்சிங் வர்மா வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துமாறு வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நோட்டீசுக்கு ராம்தயால் வர்மா பதில் தெரிவிக்காத்தால் வங்கி அதிகாரிகள், அவருடைய வீட்டை ஜப்தி செய்வதற்காக வந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராம்தயால் வர்மா அவரது உறவினர்களுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "என் தந்தை அஜய்சிங் வர்மா, கடந்த 2006-ம் ஆண்டு உயிரிழந்தார். 

உயிரிழந்த அவர் 2009-ம் ஆண்டு வங்கியில் கடன் வாங்கியதாகவும் அதை திருப்பிச் செலுத்தக் கோரி வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி தொந்தரவு செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், வங்கி அதிகாரிகளின் தொடர் மிரட்டலால் அன்றாடம் வேலைகளைக்கூட எங்களால் செய்ய முடியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தனர். 

இதையடுத்து இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின் படி போலீசார் விசாரணை நடத்தியதில், கடந்த 2009-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த கமல்நாத் அரசின் விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தில் மர்மநபர்கள், அஜய் சிங் வர்மாவின் அடையாளங்களைப் பயன்படுத்தி போலியாக ஆவணம் தயாரித்து வங்கி கடன் பெற்றது தெரிய வந்தது. 

இதைத் தொடர்ந்து போலீசார் வங்கியில் கடன் பெற்றது யார்? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் பெயரில் வங்கியில் கடன் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh Bank Notices send to Death person


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->