7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - தாயுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி.!
life penalty to mother for daughter harassment kerala
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், மனநலம் பாதிக்கப்பட்ட கணவரை பிரிந்து, தன் மகள்களுடன், திருமணம் செய்யாமல் மற்றொரு ஆணுடன் வாழ்ந்து வந்தார். ஆனால், அந்த நபர் அந்தப் பெண்ணின் 7 வயது மகளை பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தன் தாயிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது, 'இது பொதுவான விஷயம். யாரிடமும் இது குறித்து தெரிவிக்கக் கூடாது' என்று, சிறுமியை தாய் கண்டித்துள்ளார். இதையடுத்து, சிறுமியை அந்த நபர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

இதையடுத்து, இரு சிறுமிகளும் அந்த வீட்டிலிருந்து தப்பித்து பாட்டி வீட்டுக்குச் சென்று பாட்டியிடம் தங்களுக்கு நடந்த சம்பவத்தை கூறினர். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பாட்டி சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, சிறுமிகளின் தாய் மற்றும் அவருடன் வாழ்ந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து, சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், மகளின் பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு, நாற்பது ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, உத்தரவிடபட்டுள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடபட்டுள்ளது.
English Summary
life penalty to mother for daughter harassment kerala