இனி ஆபாச படம் வைத்திருந்தாலே சிறை தண்டனை!! விரைவில் அமலுக்கு வரும் புதிய சட்டம்!!
இனி ஆபாச படம் வைத்திருந்தாலே சிறை தண்டனை!! விரைவில் அமலுக்கு வரும் புதிய சட்டம்!!
குழந்தைகளை ஆபாசமாக காட்டும் விதத்தில் படங்கள் தங்களது மொபைல் போனில் வைத்திருந்தாலோ அல்லது அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தாலோ, மேலும் குழந்தைகளை தவறான முறையில் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தாலோ, அவர்களுக்கு வெளிவர முடியாத சிறை தண்டனை வழங்கப்படும்.

இந்த சட்டத்தை குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் சேர்க்க உள்ளதாக சட்டதிருந்த மசோதா சட்டத்துறை மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக குழந்தைகளை ஆபாசமாகச் சித்தரிக்கும் படங்களை பார்ப்பதாலோ அல்லது பதிவு செய்து சேமித்தாலோ 5 ஆண்டுகள் மற்றும் 7 ஆண்டுகள் வரை ஜாமீனில் வெளிவர முடியாத சிறை தண்டனை விதிக்கப்பட உள்ளது. இந்த தணடனையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இருந்தால் ஜாமினில் வெளிவரமுடியாது.

மேலும், இதில் எந்த ஒரு தொலைத்தொடர்பு சாதனத்தின் வழியாகவும் குழந்தைகளை ஆபாசமாக படம் எடுத்து பகிர்ந்தாலும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. குழந்தைகளை ஆபாசமாக படம் எடுத்து வைத்திருப்பவர் பற்றி தகவல் கொடுக்காமல் இருந்தால், ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இதனை மீண்டும் மீண்டும் செய்தால் ரூ.௫௦௦௦ அபராதம் விதிக்கப்படும்.

இதற்கான சட்டதிருந்த மசோதா விரைவில் அமல்படுத்தப்படும் மற்றும் இதனை அமல்படுத்த அடுத்த வாரத்தில் அமைச்சகங்களின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று தகவல் வந்துள்ளது.
English Summary
Life imprisonment New law coming soon