காரைக்கால் : மாணவனை விஷம் கொடுத்து கொலை செய்த விவகாரம் - சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு ஆப்பு! - Seithipunal
Seithipunal


காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரி சர்வைட் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்த மாணவன் பாலமணிகன்டன், இவருக்கு சக மாணவியுடன் கல்வி மற்றும் இதர கலையில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக, மாணவியின் தாயார், பாலமணிகண்டனுக்கு விஷம் கொடுத்து கொலை முயற்சி செய்தார். 

இதையறிந்த மாணவனின் தாய் கொடுத்த புகாரையடுத்து, போலீசார் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர். காரைக்காலில் பல்வேறு தரப்பினர் இந்த சம்பவம் குறித்து தெரிவித்ததாவது, மாணவன் பாலமணிகண்டன், அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போது, போலீசாரும், மருத்துவர்களும் அலட்சியமாக செயல்பட்டதால்தான், மாணவன் உயிரிழந்தான் என்று தெரிவித்தனர். மேலும், போலீசார் மற்றும் மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்பட வேன்டும் என வலியுறுத்தி வந்தனர். 

காரைக்காலில், சிறுவனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு இன்று ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்த மாணவர் இறந்த விவகாரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு பேரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அரசு மருத்துவர்கள் விஜயகுமார், பாலாஜியை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். உரிய சிகிச்சை தரவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்த நிலையில், சரியான மருத்துவம் பார்க்கப்பட்டதாக அரசின் குழு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

killed student due to competition in studies


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->