பிறந்த நாளே.. இறந்த நாளான பரிதாபம்.. இளம்பெண்ணுக்கு அரங்கேறிய கொடூரம்.!
Kerala women died In Birthday
கேரள மாநிலத்தில் உள்ள தலபாடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் என்பவரின் மனைவி தான் ஜெயசீலா. ரஞ்சனுக்கும் ஜெயசீலாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. ஜெயசீலா வீட்டிற்கு அருகில் இருக்கும் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் அவருடைய பிறந்தநாள். அன்றைய தினத்தில் அவர் வழக்கம் போல தான் வேலை செய்யும் பேக்கரி கடைக்கு சென்று கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டு இருந்தார். இவர் அணிந்திருந்த துப்பட்டா எதிர்பாராத விதமாக அந்த கிரைண்டரில் சிக்கி இருக்கிறது.

இதனால், நிலை தடுமாறி கீழே விழுந்த அவரது தலையில் பலமான அடி விழுந்தது. இதனைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் ஜெயசீலாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜெயசீலா உயிரிழந்து விட்டார். பிறந்த நாளிலேயே அவர் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kerala women died In Birthday