காதல் திருமணம் செய்த பெண் வரதட்சணைக்காக எரித்துக்கொலை..! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் வெங்கனூர் பகுதியை சார்ந்தவர் அசோகன். இவரது மனைவி மோளி. இவர்களின் மகள் அர்ச்சனா (வயது 22). இவரும், அங்குள்ள விழிஞ்சும் அருகேயுள்ள உச்சக்கடா பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (வயது 26). இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளனர். 

கணவரின் வீட்டருகே வாடகைக்கு வீடெடுத்து புதுமண காதல் திருமண ஜோடிகள் வசித்து வந்த நிலையில், கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த சுரேஷுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ரூ.3 இலட்சம் பணம் கேட்டு தனது மனைவி மற்றும் மனைவியின் குடும்பத்தாரை சுரேஷ் தனது குடும்பத்துடன் தொந்தரவு செய்து வந்துள்ளார். 

இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அர்ச்சனா தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை சமாதானப்படுத்திய சுரேஷ், மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 

இந்நிலையில், அர்ச்சனா கணவரின் வீட்டில் பெட்ரோல் ஊற்றி எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு விரைந்த அர்ச்சனாவின் பெற்றோர், அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விழிஞ்சம் காவல் துறையினர், அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அர்ச்சனாவின் பெற்றோர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் அர்ச்சனாவின் கணவர் சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காதல் திருமணம் செய்த பெண் வரதட்சணை கொடுமையால் கணவரால் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Thiruvananthapuram Woman Archana Murder by Love Marriage Husband Suresh Police Investigation


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal