கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது - கேரளா உயர்நீதிமன்றம் அதிரடி.!!
kerala high court order no held political functions at temples
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் கடைக்கல் பகவதி சேத்திரம், ஆட்டிங்கல் இந்திலையப்பன் கோவில் உள்ளிட்ட இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் திருவிழா நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் போது நடைபெற்ற நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யப்பட்டதாக கூறி எர்ணாகுளம் மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கோழிக்கோடு தளி கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் கம்யூனிஸ்டு மாணவர் அமைப்பு பெயரை கூறி நிகழ்ச்சி நடந்தது. கோவில்களில் ஆசார நிகழ்ச்சிகளை தவிர அரசியல் உள்ளிட்ட பிற நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, கேரளாவில் கோவில்களில் அன்றாட நிகழ்ச்சிகள் தவிர அரசியல் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.

கோவில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, கட்சி மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று திருவிதாங்கூர், மலபார், கொச்சி தேவசம்போர்டுகளுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், மத நிறுவனங்களை துஷ்பிரயோகம் செய்யும் செயல்களை தடுக்க வகுக்கப்பட்ட 1988-ம் ஆண்டு சட்டங்களை பின்பற்றுவதை தேவசம்போர்டுகள் உறுதி செய்ய வேண்டும். பின்பற்றாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்க தேவசம்போர்டு முன் வர வேண்டும். இந்த சம்பவத்தில் கோவில்களுக்கு வழிகாட்டுதல், அறிவுரைகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தேவசம்போர்டுகள் தரப்பில் இருந்து கோவிலில் ஆசார நிகழ்ச்சிகள் தவிர பிற நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு ஏற்படுத்துவது சிரமமானது என்று தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், தேவசம்போர்டு சட்டம் 1988-ம் ஆண்டு 3-வது பிரிவின் கீழ் கோவில்கள், அதன் சுற்றுப்புறங்களில் கட்சி மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்த தடை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியது.
English Summary
kerala high court order no held political functions at temples