இத்தனை கோடியா? கூட்டுறவு வங்கியில் கம்பி நீட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! சிக்கிய கவுன்சிலர்!  - Seithipunal
Seithipunal


கேரளா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் ரூ. 300 கோடிக்கும் மேல் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. 

புகாரின் பேரில் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்த விசாரணையை அமலாக்க துறையினரும் மேற்கொண்டனர். 

விசாரணையில் கோடி கணக்கில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து பண மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கு தொடர்பாக முதல் மந்திரி பினராய் விஜயன், மந்திரி சபையில் இருந்த தற்போதைய எம்.எல்.ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

மேலும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சிலரை அமலாக்கத்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது அமலாக்கத்துறையினர் தன்னை தாக்கியதாக கவுன்சிலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் வீட்டில் வைத்து அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் கருவன்னூர் வங்கியில் கணக்காளராக பணியாற்றி வந்த ஜில்ஸ் என்பவரும் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். 

பின்னர் இவரையும் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala cooperative bank Marxist commune councilor fraud


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->