பள்ளியின் தலைமை ஆசிரியர் இஸ்லாமியர் என்பதால் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த மூவர் கைது!
Karnataka School Muslim Principal issue Water Tank Poisoned
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹூலிக்கட்டி பகுதியில் செயல்படும் அரசு பள்ளியில், முஸ்லிம் தலைமையாசிரியருக்கெதிராக நடந்த பயங்கரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டதால் 12 மாணவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலேமான் கோரிநாய்க் என்ற இஸ்லாமிய ஆசிரியர் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். அவரை பதவியிலிருந்து நீக்க ஜூலை 14ஆம் தேதி வலதுசாரி இயக்கமான 'ஸ்ரீ ராம் சேனை'யைச் சேர்ந்த ஒருவர் உள்பட மூவர், ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவனிடம் விஷம் நிரப்பிய குப்பி கொடுத்து, குடிநீரில் கலக்கக் கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர். முதல்வர் சித்தராமையா இந்த சம்பவத்தைக் கண்டித்து, இது மதவெறி உணர்வால் தூண்டப்பட்ட குற்றம் எனக் தெரிவித்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்..
English Summary
Karnataka School Muslim Principal issue Water Tank Poisoned