பிறந்த குழந்தையை கவ்விக்கொண்டு.. ஓடிய நாய்.. மருத்துவமனையில் அதிர்ச்சி.!
Karnataka Govt Hospital
கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிவமோகா மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை ஒன்றில் இருக்கின்ற மகப்பேறு வார்டுக்கு அருகில், புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்றை நாய் வாயில் கவ்வியவாறு சுற்றி திரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை கண்ட பொதுமக்கள் சிலர் உடனே இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் அந்த நாயை அடித்து விரட்டிவிட்டு அந்த பிறந்த குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவிலிருந்த குழந்தையை நாய் கவ்விச் சென்றதால் அது உயிரிழந்ததா? மேலும், உயிரிழந்துவிட்டதால் யாராவது தூக்கி வீசிவிட்ட குழந்தையை நாய் கவ்வி வந்ததா என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.