நண்பர்களுடன் கண்மாயில் குளிக்க சென்று அரங்கேறிய சோகம்.. ஐந்து பேர் பிணமாக மீட்கப்பட்ட பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள சிக்மகளூரு முடிகெரே அருகேயுள்ள ஆல்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வசதாரே கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளத்தில் குளிக்க, பகுதியை சார்ந்த 22 வயதுடைய ரகு, 23 வயதுடைய சந்தீப், அவரின் நண்பர் தீபக் (வயது 22), திலீப் (வயது 24), சுதீப் (வயது 22) ஆகியோர் சென்றுள்ளனர். 

இந்நிலையில், இவர்கள் ஐவரும் குளித்துக்கொண்டு இருந்த நிலையில், திடீரென அடுத்தடுத்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களை நீண்ட நேரமாகவும் காணவில்லை என்பதால், குலத்திற்கு சென்றுள்ளனர். அப்போது இவர்களின் சட்டைகள் மற்றும் செருப்புகள் மட்டும் கரையில் இருந்துள்ளது. 

இவர்கள் குளத்தில் மூழ்கியிருக்கலாம் என்று உறவினர்கள் கருதிய நிலையில், தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சுமார் 3 மணிநேர தேடலுக்கு பின்னர், இவர்கள் ஐவரும் குளத்தில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.   

காவல்துறையினர் இவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், திருமண விருந்தில் கலந்துகொள்ள வந்த நேரத்தில், இந்த சோகம் அரங்கேறியது தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka 5 Friends died in Lake


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal