ஆளுநர் பதவியை ராஜினாமா செய்கிறாரா முர்மு?! மத்திய அரசில் பணியா?!  - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீர்  துணைநிலை ஆளுநர் கிரிஷ் முர்மு புதன்கிழமை ராஜினாமா செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது

குஜராத் மாநிலத்தில் 1985  ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணி அதிகாரியாக தேர்வான அவர், குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக இருந்தார்.

2001 ஆம் ஆண்டில், நரேந்திர மோடி குஜராத்தின் முதல்வரான போது, முர்மு நிவாரண ஆணையராக இருந்தார். பின்னர்  அவர் சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் துறைக்கான ஆணையராக இருந்தார் பின்னர் குஜராத் கடல் வாரிய நிர்வாக இயக்குனர் ஆகவும் இருந்தார். 

ராஜினாமா செய்யும் அவருக்கு மத்திய தணிக்கை குழு தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் லாடாக் யூனியன் பிரதேசம் எனப் பிரிக்கப்பட்ட பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ஆம் தேதி முர்மு துணை நிலை ஆளுநராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது. கிரிஷ் சந்திர முர்மு, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்  துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jammu kashmir LG murmu resigns source


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->