பாகிஸ்தானின் டிரோன் தாக்குதலின் எதிரொலி; ஐ.பி.எல் போட்டி ரத்து: பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட வீரர்கள் மற்றும் ரசிகர்கள்..! - Seithipunal
Seithipunal


நடப்பு ஐ.பி.எல் போட்டியின் இன்றைய லீக் ஆட்டம் இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இரவு 07.30 மணிக்கு தொடங்கியது.  ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. தர்மசாலாவில் மழை பெய்ததால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து மழை நின்றதும் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார் . அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பஞ்சாப் அணி 10.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. வர்ணனையாளர்கள் மாதானத்தில் உள்ள ராட்சத விளக்குகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போட்டியில் தாமதம் என்று கூறினார். பின்னர் போட்டி இன்று இடைநிறுத்த படுவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உயர் கோபுர மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. 

அத்துடன், போட்டி நிறுத்தப்பட்ட நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் மைதானத்தில் இருந்த ரசிகர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டதையடுத்து வீரர்களை சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் அழைத்து வர பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL match canceled in response to Pakistan drone attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->