இந்தூர் "கோடீஸ்வர" யாசகர்: 3 மாடி வீடு, கார், வட்டித் தொழில் - பிடிபட்ட அதிர்ச்சி மன்னன்!
Indores Millionaire Beggar 3 Story House Luxury Ca and a Money Lending Business
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரை 'யாசகர் இல்லாத நகரமாக' மாற்ற அரசு மேற்கொண்டு வரும் சோதனையில், பல கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள ஒரு யாசகர் பிடிபட்டுள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த மங்கிலால்?
இந்தூரின் சரபா சந்தையில், மாற்றுத்திறனாளி போலப் பாவனை செய்து, சத்தமில்லாமல் அமர்ந்து யாசகம் பெற்று வந்தவர் மங்கிலால். மக்கள் இவரின் நிலையைப் பார்த்துப் பரிதாபப்பட்டு ஒரு நாளைக்கு ₹500 வரை வழங்கியுள்ளனர். ஆனால், இவரின் பின்னணியை ஆராய்ந்த அதிகாரிகளுக்குக் காத்திருந்தது பெரும் அதிர்ச்சி.
அம்பலமான சொத்து விவரங்கள்:
3 வீடுகள் (இதில் ஒன்று 3 மாடி கட்டிடம்).
3 ஆட்டோக்கள் மற்றும் ஒரு மாருதி டிசையர் கார் (வாடகைக்கு விடப்பட்டுள்ளது).
யாசகம் பெற்ற பணத்தை வியாபாரிகளுக்கு வட்டிக்குக் கொடுத்து, தினமும் ₹2,000 வரை வட்டி வசூலித்துள்ளார்.
தன்னை ஏழை என ஏமாற்றி 'பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு வீட்டையும் பெற்றுள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் மங்கிலாலைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சுமார் ₹5 லட்சம் வரை வட்டிக்குக் கடன் கொடுத்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் உஜ்ஜைனியில் உள்ள ஆசிரமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் அவரிடம் கடன் வாங்கிய வியாபாரிகள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
English Summary
Indores Millionaire Beggar 3 Story House Luxury Ca and a Money Lending Business