கனடா நாட்டினருக்கு மீண்டும் இ - விசா - இந்தியா அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கனடா குடியுரிமை பெற்று அங்கு வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பை சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்திய அரசின் தூண்டுதலின் பேரில் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். 

அதுமட்டுமல்லாமல், நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்கு பங்கு இருப்பது தொடர்பான ஆதாரங்களும் தங்கள் வசம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டு இந்தியா - கனடா இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இந்த  நிலையில், கடந்த செப்டம்பர் 21-ம் தேதி கனடாவுக்கான விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தியது.

நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா குறித்து கனடா தெரிவித்த கருத்துகளுக்கு, இந்தியா தொடர்ச்சியாகவும், உறுதியாகவும் மறுப்பு தெரிவித்து வந்தது. மேலும், கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரத்தை வெளியிடுமாறும் இந்தியா வலியுறுத்தி வந்தது.

இதையடுத்து, பிரிட்டனில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், “கனடாவின் விசாரணையிலிருந்து விலகிச் செல்லவில்லை. 

எங்கள் மீது கனடா குற்றம்சாட்டுவதற்கு காரணம் இருக்குமேயானால் அதுதொடர்பான ஆதாரங்களை, எங்களிடம் பகிர்ந்து கொள்ளட்டும். அவர்கள் தரும் ஆதாரங்களை நாங்களும் பார்க்கிறோம்” என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு பிறகு கனடா நாட்டினருக்கு இ-விசா வழங்கும் சேவையை இந்தியா மீண்டும் துவங்கியுள்ளது. ஏற்கெனவே மருத்துவம், வணிகம், சுற்றுலா விசாக்கள் வழங்கும் சேவை கடந்த மாதம் துவங்கியதையடுத்து இ-விசா சேவையும் மீண்டும் துவங்கியthu. இதன் மூலம் நான்கு விதமான விசாக்களும் தடையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

india provide e visa to canada peoples


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->