பாகிஸ்தானுக்கு ஆதவாக வந்த நடுகல் எவை? அதிகாரபூர்வ அறிவிப்பு!
india against Pakistan support countries list
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலக நாடுகள் இருவரும் அமைதி வழியைத் தேட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்த சூழலில், பாகிஸ்தானுக்கு தெளிவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ள நாடுகளாக சீனா, துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகியவை செயல்படுகின்றன என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் அரசு தினசரி அடிப்படையில் தொடர்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், “இந்த விவகாரத்தில் இஸ்ரேலைத் தவிர இந்தியாவுக்கு தாராளமான ஆதரவு தெரிவித்த நாடுகள் எதுவும் இல்லை. பெரும்பாலான உலக நாடுகள் நடுநிலைப் போக்கையே கடைப்பிடிக்கின்றன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விளக்கங்களால், பாகிஸ்தான் சர்வதேச ஆதரவைக் கொள்கை ரீதியாக கட்டமைக்க முயற்சிக்கிறது என்பதும் தெளிவாகிறது.
English Summary
india against Pakistan support countries list