கரம்பிடிக்க வழியில்லை.. விண்ணுலகம் பயணிப்போம்..! காதலர் தினத்தன்று காதல் ஜோடியின் விபரீத முடிவு... பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரு உங்கூர் கிராமத்தை சார்ந்தவர் சிந்துஸ்ரீ (வயது 19). அங்குள்ள யமாகும்பா கிராமத்தை சார்ந்தவர் சச்சின் (வயது 25). இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு ரீதியான பழக்கமமானது பின்னாளில் காதலாக மலர்ந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், இவர்களின் காதல் விவகாரமானது இருவரின் பெற்றோருக்கும் தெரியவரவே, இருவரின் பெற்றோரும் காதலுக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். மேலும், சிந்துஸ்ரீயை அவரது காதலை கைவிடக்கூறி பெற்றோர்கள் வற்புறுத்தியுள்ளார். 

மேலும், சிந்துஸ்ரீக்கு மற்றொரு வரனை பார்த்து நிச்சயதார்த்தம் செய்து வரும் ஞாயிற்றுக்கிழமையான (16/02/2020) நாளை அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்படும் செய்யப்பட்டு இருந்துள்ளது. தனது காதலை மறக்க இயலாத சிந்துஸ்ரீ அழுதபடியே இருந்த நிலையில், காதலன் சச்சினிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 
இருவரும் வாழ்க்கையில் ஒன்றுசேர இயலவில்லை, சாவிலாவது ஒன்று சேருவோம் என்று பேசியுள்ளனர். 

இதனையடுத்து இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி சந்தித்துக்கொண்ட நிலையில், இருசக்கர வாகனத்தில் அங்குள்ள குடகு மாவட்டம் ஹாரங்கி அணைக்கு சென்று அங்குள்ள முனைப்பகுதியை சுற்றி பார்த்துள்ளனர். தற்கொலை செய்ய முதலியேயே முடிவெடுத்து, தனது வாழ்க்கையின் இறுதி நேரத்தை இன்பத்துடன் விளையாடி மகிழ்ந்த நிலையில், நீர்தேக்கப்பகுதிக்கு சென்று அணையில் குதித்துள்ளனர். 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்க்கு விரைந்த தீயணைப்பு படையினர் ஒருமணிநேரம் தேடலுக்கு பின்னர் இருவரின் உடலை மீட்டனர். இவர்களின் தற்கொலைக்கு பின்னர் மேற்கொண்ட விசாரணையில் மேற்கூறிய தகவல் தெரியவந்துள்ளது. இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in valentines day love couple suicide died in Karnataka


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal