லாட்ஜில் உல்லாசம்.. இளம்பெண்ணின் வாயில் வெடி வைத்து சம்பவம் செய்த கள்ளக்காதலன்!
In the lodge, there was joy.. The mischievous lover who made an incident by placing an explosive in the young woman's mouth
இளம்பெண்ணின் வாயில் வெடிவைத்து கொடூரமாக கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்,மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ரக்ஷிதாவுக்கும் கேரளாவை சேர்ந்த இளைஞருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதி சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில் மனைவிக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது.
, ரக்ஷிதாவுக்கும் அவரது உறவுக்கார இளைஞரான அதே கிராமத்தை சேர்ந்த சித்தராஜு என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், ரக்ஷிதாவும் அவரது கள்ளக்காதலனான சித்தராஜுவும் நேற்று ஹிர்யா கிராமத்தில் உள்ள லாட்ஜிக்கு உல்லாசமாக இருக்க சென்றுள்ளனர்.அப்போது லாட்ஜில் வைத்து ரக்ஷிதாவுக்கும் சித்தராஜுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சித்தராஜு தான் மறைத்து கொண்டுவந்த வெடிமருந்தை ரக்ஷிதாவின் வாயில் அடைத்து அதை வெடிக்கச்செய்துள்ளார். இதில், ரக்ஷிதாவின் முகம் முழுவதும் வெடித்து சிதறி அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து கள்ளக்காதலன் சித்தராஜு அங்கிருந்து தப்பியோட முயற்சித்தபோது லாட்ஜ் ஊழியர்கள் விரைந்து சென்று தப்பியோட முயற்சித்த சித்தராஜுவை பிடித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சித்தராஜுவை கைது செய்தனர். மேலும் லாட்ஜ் அறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரக்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
In the lodge, there was joy.. The mischievous lover who made an incident by placing an explosive in the young woman's mouth