வீட்டிற்கு வெளியே வந்த ஆசிரியை..! சுத்தியால் அடித்து கொடூர கொலை.. கொலையாளி தற்கொலை.!  - Seithipunal
Seithipunal


மும்பையில் பிரபல குடியிருப்பில் தன்னுடைய கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வரும் யாஷ்மிதா என்ற 37 வயது பெண்மணி ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் வீட்டிலிருந்து யாஸ்மிதா வெளியே வர வாகனம் நிறுத்தும் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர்,  மறைத்து வைத்திருந்த சுத்தியால் அடித்து தாக்கினார்.

இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த யாஸ்மிதா  துடிதுடிக்க கட்டிட காவலாளி ஓடி வந்து தாக்கிய நபரை பிடிக்க முயன்றார். ஆனால், அவரையும் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

murder,

இதற்கிடையில் படுகாயமடைந்த யாஸ்மிதாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் யாஸ்மிதாவிற்கு கொலையாளி நன்கு பழக்கமானவர் என்பது தெரியவந்துள்ளது.

அவரை தேடிய பொழுது கிஷோர் சாவந்த் என்ற அந்த குற்றவாளி தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார் என்பது தெரியவந்துள்ளது.இச்சம்பவத்தின் பின்னணி என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Mumbai teacher killed by unknown person


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->