குஜராத்தில் கோர விபத்து...! - நின்றுகொண்டிருந்த லாரி மீது சொகுசு பேருந்து அதிவேகமாக மோதி 6 பேர் பரிதாப பலி...! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இருந்து ராஜஸ்தான் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப் பேருந்து, இன்று அதிகாலை பரிதாபகரமான சாலை விபத்தில் சிக்கியது.

வதோதரா மாவட்டத்தில் உள்ள வதோதரா–ஹலோல் தேசிய நெடுஞ்சாலையில், கோதம்பி கிராமம் அருகே அதிகாலை சுமார் 4 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் பழுதுபார்க்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்பகுதியில் அதிவேகமாக மோதி நொறுங்கியது.

இந்த கோர மோதலால் பேருந்தின் முன்பகுதி முழுமையாக சேதமடைந்து உருக்குலைந்தது. விபத்தின் தாக்கம் மிகவும் கடுமையாக இருந்ததால், சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயங்களுடன் துயர நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் ஜரோத் காவல் நிலைய காவலர்கள் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் உடனடியாக வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்த மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Horrific accident Gujarat 6 people tragically died when luxury bus crashed stationary lorry high speed


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->