கொடூரம் மோமோஸ் மாவு மெஷின்! தலையோடு சிறுமி சிக்கி பலி! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மோமோஸ் மாவு மெஷினில் சிக்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி பேகம்பூரில் உள்ள அனுமன் சவுக் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு  சிறுமி மோமோ தயாரிக்கும் கடையில் உதவியாளராக பணிபுரிந்த்து வருவந்தாக கூறப்படுகிறது. சம்பவதன்று சிறுமி மோமோஸ் மற்றும் ஸ்ப்ரிங் ரோல்ஸ் தயாரிப்பதற்காக சிறிய அளவிலான மாவு பிசையும் இயந்திரத்தை இயக்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சிறுமி இயந்திரத்தை இயக்கி கொண்டிருந்தபொது திடீரென கை உள்ளே மாட்டிக் கொள்ளவேஅவர் தலையோடு இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டுள்ளார். சிறுமியின் அலசல் சத்தம் கேட்டு அங்க பணிபுரிந்து கொண்டிருந்தவர்கள்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த போலீஸ்சார் படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் சிறுமி உயிர்இழந்த விவகாரத்தில் சிறுமியை பணிக்கு அமர்த்திய ராஜேஷ் குமார் என்பவர் மீது குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Girl dies after getting stuck in momos flour machine in Delhi


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->