#Video : வெறி நாய் கடிக்கு பலியான 4 வயது சிறுவன்.. பதைபதைக்கவைக்கும் சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வெறி நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. அவ்வப்போது வெறி நாய் கடிப்பதால் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் காயமடைவதும் ஒரு சில பேர் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் பகுதியில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வெறி நாய் கடிக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானாவின் நிஜாமாபாத் பகுதியைச் சார்ந்த பிரதீப் என்ற சிறுவன் தனது தந்தையுடன் அவர் காவலாளியாக பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்றபோது இந்த துயரச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களிலும் இந்த காட்சியானது பதிந்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

தந்தையுடன் சென்ற சிறுவன் தனியாக நடந்து கொண்டிருக்கும்போது  சிறுவனை சுற்றி வளைத்த மூன்று தெரு நாய்கள் தாக்க முயல்கின்றன. அவற்றிடமிருந்து தப்பிச்செல்லும் சிறுவன் ஓடுகிறான் சிறுவனை விரட்டிச் செல்லும் நாய்கள் அவனை கீழே தள்ளிவிட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக உடல் எங்கும் கடிக்கின்றன. ஒவ்வொரு முறையும் சிறுவன் தன் பலத்தைக் கொண்டு நாய்களிடமிருந்து தப்பிச் செல்லும் போது அவை சிறுவனை துரத்திச் சென்று கடித்து குதறின.

படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை  மீட்டு மருத்துவமனையில்  அனுமதித்தனர். நாய்கள் கடித்ததால் உடலில் இருந்து அதிகமாக ரத்தம் வெளியேறி சிறுவன் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். வெறி நாய் கடிக்கு நான்கு வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக விரைந்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four year old kid lost his life to stray dogs attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->