ம.பி-யில் அதிர்ச்சி: கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் மாணவன்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலத்தில் கல்லூரி முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்த முன்னாள் மாணவனை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள பி.எம் பார்மசி கல்லூரியின் முதல்வரான விமுக்தா ஷர்மா(50) நேற்று மாலை கல்லூரி முடிந்து காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை வழிமறைத்த வாலிபர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து கல்லூரி முதல்வரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கல்லூரி முதல்வருக்கு 80 சதவீத தீக்காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கல்லூரி முதல்வர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் முன்னாள் மாணவர் அசுதோஷ் ஸ்ரீவஸ்தவா என்பதும், தனது மதிப்பெண் சான்றிதழை வழங்குவதற்கு முதல்வரை சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் சான்றிதழ் வழங்காததால் ஆத்திரமடைந்து முதல்வரை பெற்றோர் ஊற்றி தீ வைத்து கொளுத்தியது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம்(ஐபிசி) பிரிவு 307 (கொலை முயற்சி) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former student who poured petrol on the college principal and burnt him in madhya pradesh


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->