இந்த உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? இந்தியா பிடித்த இடம்? இதோ முழு விவரம்!
finland happiest country world
உலக மகிழ்ச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பு (ஐ.நா.) தனது வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வு 147 நாடுகளில், மகிழ்ச்சியின் நிலைவரத்தை மதிப்பீடு செய்யும் விதமாக வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், சமூக ஆதரவு, மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய முக்கிய காரணிகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பட்டியலில் பின்லாந்து, தொடர்ந்து எட்டாவது ஆண்டாக, உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன், மற்றும் நெதர்லாந்து ஆகியவை முறையே 2 முதல் 5-வது இடங்களைப் பிடித்துள்ளன. அதேசமயம், இஸ்ரேல் 8-வது இடத்தில் உள்ளது.
கடந்த ஆண்டில் 126-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 118-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆச்சரியமாக, உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, மகிழ்ச்சியான முதல் 20 நாடுகளில் இடம்பிடிக்கத் தவறியுள்ளது.
அமெரிக்கா (24வது இடம்), இங்கிலாந்து (23வது இடம்), மற்றும் பிரான்ஸ் (33வது இடம்) ஆகியவை முறையே இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தான், உலகில் மிகவும் குறைவான மகிழ்ச்சியைக் கொண்ட நாடாக, இறுதி இடத்தைப் பிடித்துள்ளது.
English Summary
finland happiest country world