"அனுமன்" முன்பு போஸ் கொடுத்த பெண் பாடி பில்டர்கள்.. மல்லுக்கட்டும் காங்கிரஸ்-பாஜக..!!
Female body builders posed before Hanuman in BJP function
மத்திய பிரதேசம் மாநிலம் ரத்லம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 13வது மிஸ்டர் ஜூனியர் உடல் கட்டமைப்பு போட்டி கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெண் பாடி பில்டர்களும் பங்கேற்றனர்.
போட்டி நடைபெற்ற மேடையில் அனுமன் உருவப்படம் இடம்பெற்று இருந்தது. அதற்கு முன்னால் பெண் பாடி பில்டர்கள் போஸ் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

"பிரம்மச்சாரி கடவுளான அனுமானை பாஜக அவமதித்துள்ளது. போட்டி நடந்த இடத்தில் நேற்று கங்கை நதி நீர் தெளித்து அனுமன் மந்திரங்கள் ஓதினாரகள். இதற்கான தண்டனையை கூடிய விரைவில் அனுமன் அளிப்பார்" என மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயங்க் ஜாட் கூறியுள்ளார்.
இதற்கு பாஜக செய்தி தொடர்பாளர் கிதிஸ் பாஜ்பாய் பெண்கள் விளையாட்டில் சிறந்து விளங்குவதை காங்கிரஸ் விரும்பவில்லை என பதிலடி வந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "காங்கிரஸ்காரர்கள் பெண்கள் மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக் மற்றும் நீச்சல் ஆகியவற்றில் பங்கேற்பதை பார்க்க முடியாது. அவர்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும் பெண்களை அழுக்கு கண்களால் பார்ப்பார்கள்" என பதில் அளித்துள்ளார்.
English Summary
Female body builders posed before Hanuman in BJP function