மகளுக்காக மனைவி இறந்ததை மறைத்த தந்தை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


மகளுக்காக மனைவி இறந்ததை மறைத்த தந்தை - காரணம் என்ன?

புதுச்சேரி மாநிலம் வில்லியனுார் அடுத்த ஏம்பலம் பகுதியில் பாலமுருகன் நகரைச் சேர்ந்தவர்கள்  தண்டபாணி-அரசம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இதில், இளைய மகளுக்கு நேற்று நல்லாத்துாரில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அரசம்மாள் மணமகளுக்கு சடங்கு செய்வதற்காக வீட்டின் அருகே உள்ள உறவினர்களை அழைக்க நடந்து சென்றார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அரசம்மாள் உடலை மெட்டு கதிர்காமம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணம் தடைபடக்கூடாது என்பதற்காக மனைவி உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மருத்துவமனையிலேயே வைத்திருக்க தண்டபாணி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து தண்டபாணி திட்டமிட்டபடி மகளின் திருமணத்தை நேற்று நடத்தி முடித்தார். இன்று அரசம்மாள் உடல் பிரேத பரிசோதனை செய்து தண்டபாணியிடம் ஒப்டைக்கப்பட உள்ளது.

மகள் திருமணத்திற்காக போடப்பட்ட பந்தலிலேயே மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய உள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father hide wife died for daughter marriage in puthucheri


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->