ரூ.10 க்கு சுவையான 'வெஜ் பிரியாணி' கொடுக்கும் விவசாயி...! ஆந்திராவில் பரபரப்பு!
Farmer who offers delicious veg biryani for Rs10 A stir in Andhra Pradesh
ஆந்திர பிரதேசம் ஏலூரு மாவட்டம், தெந்துலூரு பகுதியை சேர்ந்த விவசாயி சிவாஜி. இவர் இயற்கை உரங்களை பயன்படுத்தி தனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

மேலும், நகரத்திலுள்ள அரசு அலுவலகங்கள் வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சுற்றுப்புறங்களிலிருந்து ஏராளமான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.இவர் அங்கு அலுவலகங்களுக்கு வந்து செல்பவர்கள் உணவு கிடைக்காமல் தவித்து செல்வதை கண்டார்.
இதன் காரணமாக மக்களின் பசியை போக்க சிவாஜி செய்த முடிவுதான் இது.அவ்வகையில், தனது நிலத்தில் இயற்கை முறையில் விளைவித்த அரிசி மற்றும் காய்கறிகளைக் கொண்டு வெஜ் பிரியாணி சமைத்து ரூ. 5-க்கு வழங்கி வந்தார்.
அதில் அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக ரூ.10 க்கு வெஜ் பிரியாணி வழங்கி வருகிறார். இந்த 10- ரூபாய்க்கு சுவையான வெஜ் பிரியாணி வழங்குவதால் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் உணவு வாங்கி சாப்பிட்டு திருப்தியாக செல்கின்றனர்.
English Summary
Farmer who offers delicious veg biryani for Rs10 A stir in Andhra Pradesh