மாடி பேருந்துகளுக்கு பிரியா விடை - மும்பையில் பயணிகள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!
farewell function to double decker buses in mumbai
மாடி பேருந்துகளுக்கு பிரியா விடை - மும்பையில் பயணிகள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கடந்த 86 ஆண்டுகளாக மக்களின் மனம் கவர்ந்த பெஸ்ட் மாடி பேருந்து, நகர வீதிகளை அலங்கரித்து வந்தது. இந்த மாடி பேருந்துகளில் மும்பை மக்கள் மட்டுமல்லாமல், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் பயணம் செய்ய விரும்புகிறார்கள்.
இதற்கிடையே, பெஸ்ட் நிர்வாகம் நவீன காலத்திற்கு ஏற்ப ஏ.சி. மாடி பேருந்துகளை இயக்க முடிவு செய்தது. அந்த வகையில் 35 பேருந்துகளை வாங்கி கடந்த பிப்ரவரி மாதம் சேவையை தொடங்கியது. இதனால் குளு குளு சூழலில் மக்கள் மாடி பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பெஸ்ட் நிர்வாகம் இதுநாள் வரை மக்களுக்கு சேவையாற்றிய ஏ.சி. அல்லாத மாடி பேருந்துகளை விடை கொடுக்க முடிவு செய்தது.
அதன்படி நேற்று முதல் பழைய மாடி பேருந்துகளுக்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது.
அதற்காக அந்தேரி அகர்கர் சவுக்கில் நேற்று மாலை 5.30 மணியளவில் பிரியாவிடை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பெஸ்ட் குழும அதிகாரிகள் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட மாடி பேருந்துகளுக்கு பிரியாவிடை கொடுத்தனர். இதற்காக தேங்காய் சுற்றி பேருந்துக்கு சிறப்பு பூஜையும் நடத்தினர். இந்தச் சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
farewell function to double decker buses in mumbai