உலகக் கோப்பை நடக்கும் டெல்லியை அதிரவிட்ட நிலநடுக்கம்!! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராட் நகருக்கு வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் உயிரிழந்தனர். அதன் பிறகு அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை ஹராட் நகரில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.3 என பதிவானதால் இந்த அதிர்வானது கஜிகிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்தான எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. 

இந்த நிலையில் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிய வருகிறது. உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டா, குருகிராம் பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 3.1 என பதிவாகியுள்ள நில அதிர்வானது ஃபரிதாபாத் பகுதியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையின் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் மோதும் போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake in Delhi and surrounding


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->