அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் - சுனாமி வர வாய்ப்பா?
earthquake in andhaman nikobar sea
அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் - சுனாமி வர வாய்ப்பா?
இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில நாட்களாகவே நிலநடுக்கங்கள் அதிகளவில் உணரப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் உயிர்சேதம் உருவாகியுள்ளது.
இதன் காரணமாக உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் தொடர்பான பதிவுகளை விஞ்ஞானிகள் கவனமாக ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், அந்தமான் நிகோபர் தீவுகள் அருகே அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கடலோரப் பகுதிகளில் உள்ள கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.
இருப்பினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
earthquake in andhaman nikobar sea