மகாராஷ்டிரா : 9 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் அடங்கிய சிரப் பாட்டில்கள் பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் கொண்டாரி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 9.30 லட்சம் மதிப்புள்ள கோடீன் போதைப்பொருள் அடங்கிய இருமல் சிரப் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்து செய்துள்ளனர். 

இந்த சம்பவம் குறித்து காவல் அதிகாரி தெரிவித்ததாவது:-  "எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, கொங்கன் காவல் நிலைய போலீசார் குழு ஒரு இடத்தில் சோதனை நடத்தியது. அந்த சோதனையில், ஒரு லாரியில் இருந்து டெம்போவிற்கு இருமல் சிரப் பாட்டில்கள் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதைப்பார்த்த போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கடத்திய போதைப்பொருள் அடங்கிய சிரப் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் அவர்களிடம் இருந்த ஒரு டிரக் மற்றும் ஒரு டெம்போ உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். 

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drugs syrub bottles seized in maharastra


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal