கனிமொழி குழுவின் ரஷியா பயணத்தில் டிரோன் தாக்குதல்!
DMK MP Kanimozhi Russia Trip Airport drone attack
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்க, இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக தாக்கப்பட்டன. இந்த நடவடிக்கையைத் தெளிவுபடுத்தும் வகையில், மத்திய அரசு 7 குழுக்களை அமைத்து, அவற்றை பல்வேறு வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்தது.
அந்தவகையில், கனிமொழி எம்.பி. தலைமையிலான குழு ரஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. நேற்று, இந்த குழு ரஷியாவின் மாஸ்கோவுக்கு பயணம் மேற்கொண்டது. விமானம் மாஸ்கோவின் அருகே வந்தபோது, அப்பகுதியில் டிரோன் தாக்குதல் ஏற்பட்டதாக தகவல் வந்தது. இதனால் விமானம் சுமார் 45 நிமிடங்கள் வானத்தில் சுழன்று பாதுகாப்பு நிலையை உறுதி செய்தது. பின்னர் விமானி அவசரத் தடைகள் இல்லை என உறுதி செய்ததையடுத்து, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
கனிமொழி மற்றும் குழுவில் இருந்த அனைவரும் நலமாக உள்ளனர் என நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.
ரஷியா–உக்ரைன் போர் தொடர்ந்து வரும் நிலையில், டிரோன் தாக்குதல்கள் அங்கு சகஜமாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற வெற்றி நாள் விழாவில் சர்வதேச தலைவர்கள் பங்கேற்றபோது, தாக்குதல் நேரிட்டால் பொறுப்பல்ல என உக்ரைன் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK MP Kanimozhi Russia Trip Airport drone attack