தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் அருண்ராஜ் IRS. இணை அல்லது துணை பொது செயலாளர் பதவி வழங்க வாய்ப்பு..? - Seithipunal
Seithipunal


நடிகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரானவர் விஜய். நடிகர் விஜய் 2026 சட்ட மன்ற தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என முழு நேர அரசியலில் ஈடுப்பட்டு வருகிறார். தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு, கட்சி மாநாடு, புத்தக வெளியீட்டு விழா என கட்சி ஆரம்பித்ததில் இருந்து அதிரடியாக அரசியல் செய்து வருகிறார்.

கடந்த மாதங்களில் விஜயின் அறிவிக்கப்படாத அரசியல் ஆலோசகராக அருண் ராஜ் IRS செயல்படுகிறார் என  பாஜக முன்னாள் நிர்வாகியான திருச்சி சூர்யா சிவா குறிப்பிட்டு இருந்தார். அத்துடன், மத்திய அரசில் பணி செய்யும் ஒருவர் ஒரு அரசியல் கட்சிக்கு ஆலோசகராக இருப்பது அதிர்ச்சிகரமான தகவல் என கூறியிருந்தார். 

இந்நிலையில், அருண் ராஜ் IRS விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஆலோசனை வழங்கி வந்த இவருக்கு தவெக கட்சியின் தலைமையில் முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அவருக்கு இணை அல்லது துணை பொது செயலாளர் பதவி வழங்க அதிக வாய்ப்பு உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அருண் ராஜ் IRS தன்னுடைய பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற  விண்ணப்பம்  வழங்கி காத்திருந்த நிலையில் தற்போது அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Arunraj IRS to join TVK


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->